» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

நமீபியாவை வீழ்த்தி வெற்றியுடன் உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது இந்திய அணி

செவ்வாய் 9, நவம்பர் 2021 10:28:35 AM (IST)



நமீபியா அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றியுடன் டி-20 உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றில் இந்தியா 2-வது பிரிவில் இடம் பிடித்திருந்தது. முதல் போட்டியில் பாகிஸ்தானிடமும், 2-வது போட்டியில் நியூசிலாந்திடமும் தோல்வியடைந்ததால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு மங்கியது. மேலும், நியூசிலாந்திடம் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்ததன் மூலம், அதிகாரப்பூர்வமாக இந்தியா அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

இந்நிலையில், இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நமீபியாவை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நமீபியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி சார்பில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய பேட்டிங் செய்தது. கே.எல். ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோகித் சர்மா 37 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கே.எல். ராகுல்- ரோகித் சர்மா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.5 ஓவரில் 86 ரன்கள் குவித்தது. அடுத்து கே.எல். ராகுல் உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை வெற்றி நோககி அழைத்து சென்றது.

கே.எல். ராகுல் ஆட்டமிழக்காமல் 36 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 54 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 19 பந்தில் 4 பவுண்டரியுடன் 25 ரன்களும் எடுக்க இந்தியா 15.2 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐந்து லீக் ஆட்டங்களில் கடைசி மூன்று போட்டிகளில் வெற்றிபெற்ற மகிழ்ச்சியுடன் டி20 உலக கோப்பை தொடரில் இருந்து இந்தியா வெளியேறியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory