» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி-20 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 5 வெற்றிகள்: பாகிஸ்தான் அணி அசத்தல்!

திங்கள் 8, நவம்பர் 2021 10:42:59 AM (IST)

டி20 உலக கோப்பையில், தான் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

டி20 உலக கோப்பை  கிரிக்கெட் தொடரில் இன்று இரவு சார்ஜாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. பாபர் அசாம் அரை சதம் கடந்து 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சோயப் மாலிக் 18 பந்துகளில் 6 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 54 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.
 
ஸ்காட்லாந்து தரப்பில் கிறிஸ் கிரீவ்ஸ் 2 விக்கெட் எடுத்தார். ஹம்சா தாகிர், சப்யான் ஷரிப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.  இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி களமிறங்கியது. ரிச்சி பெர்ரிங்டன் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இறுதியில், ஸ்காட்லாந்து 6 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி குரூப்-2 பிரிவில் 5 போட்டிகளிலும் வெற்றி ெபற்ற ஒரே அணி எனும் பெருமையைப் பெற்றது. அரையிறுதியில் குரூப்-1 பிரிவில் 2-வது இடம் பெற்ற ஆஸ்திரேலிய அணியுடன் வரும் 11-ம் தேதி மோதல் நிகழ்த்துகிறது பாகிஸ்தான் அணி.

அனுபவ வீரர் ஷோயப் மாலிக் அதிரடியாக பேட் செய்து 18 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்ததால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதில் 6 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி,ஸ்ட்ரைக் ரேட் 300 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உலகக் கோப்பைப் போட்டியில் அதிவிரைவாக அரைசதம் அடித்தவகையில் 18 பந்துகளில் அரைசதம் அடித்து இந்திய வீரர் கே.எல்.ராகுல் சாதனை வைத்திருந்தார், அதை ஷோயப் மாலிக் சமன் செய்துவிட்டார்.

ஷோயப் மாலிக் பேட் செய்தபோது இந்திய டென்னிஸ் வீராங்கனையும், அவரின் மனைவியுமான சானியா மிர்ஸா பார்வையாளர் வரிசையில் அமர்ந்து ரசித்தார். ஷோயப் மாலிக் சிக்ஸர் அடித்தபோது அதை கைதட்டி ஆரவாரம் செய்து ஆதரவு தெரிவித்தார். இந்த ஷார்ஜா மைதானத்தில்தான் ஷோயப் மாலிக் முதன் முதலில் கடந்த 1999ம் ஆண்டு அக்டோபரில் மேஇ.தீவுகள் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமாகினார், இதே மைதானத்திலிருந்துதான் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வாசிம் அக்ரம் தனது கடைசிப் போட்டியை ஆடி விடைபெற்றார். இந்த மைதானத்தில் மீண்டும் மாலிக் அரைசதம் அடித்தது சிறப்பாகும்.

ஸ்காட்லாந்து அணியில் ஆறுதல் அளிக்கும் விஷம் அந்த அணி வீரர் பேரிங்டன் அரைசதம் அடித்து 54 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்றபடி அணியில் முன்சே(17), லீக்(14) இருவர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர் மற்றவீரர்கள் வழக்கம்போல் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் தரப்பில் சதாப்கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory