» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பும்ரா, ராகுல் புதிய சாதனை: ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி!

சனி 6, நவம்பர் 2021 10:27:39 AM (IST)



ஜடேஜாவின் சூழல் பந்து வீச்சு, பும்ரா, ராகுல் ஆகியோரின் அசத்தல் ஆட்டம் காரணமாக ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றது. நேற்று நடைபெற்ற  37 வது  லீக்  ஆட்டத்தில், இந்தியா -ஸ்காட்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை  தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி இந்தியா பந்து வீச்சை சமாளிக்க முடியாமல்  தடுமாறியது.  இந்திய அணியின் துல்லிய பந்து வீச்சாள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த ஸ்காட்லந்து அணி  17.4 ஓவர்களில் 10  விக்கெட்டுகள் இழந்து  85 ரன்கள்  எடுத்தது. இந்தியா அணி சார்பில் ஜடேஜா,  ஷமி  ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து 86  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை இந்திய அணி துவக்கியது. துவக்கம் முதலே ஸ்காட்லாந்து பந்து வீச்சை இந்திய அணி புரட்டியெடுத்தது. குறிப்பாக கே.எல் ராகுல் ஆட்டத்தில் அனல் பறந்தது. கே.எல் ராகுல் பேட்டில் பட்ட பந்துகள் அனைத்தும் சிக்சரும் பவுண்டரிகளுமாக பறந்தன. 6.3 ஓவர்களில் 89 ரன்கள் அடித்த இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்தது. 19 பந்துகளில் கே.எல் ராகுல் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.  ஆட்ட நாயகன் விருது ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது. 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி சார்பில் அதிவேகமாக 18 பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் கே.எல்.ராகுல். இதற்கு முன் 2007ல் யுவராஜ் சிங் 12 பந்துகளில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அரைசதம் அடித்திருந்தார். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அதிகவேகமாக அரைசதம் அடித்த 3-வது வீரர் ராகுல் ஆவார். டி20 போட்டியில் பவர்ப்ளே ஓவர் முடிவதற்குள் அரைசதம் அடித்த 2-வது வீரர் கே.எல்.ராகுல். இதற்கு முன் 2020ம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிராக முதல்6 ஓவர்ளுக்குள் ரோஹித் சர்மா அரைசதம் அடித்திருந்தார். ராகுல் 2-வது வீரராக அரைசதம் அடித்துள்ளார்

டி20 போட்டிகளில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் பெருமையை பும்ரா 64 வி்க்கெட்டுகளை வீழ்த்தி பெற்றார். யஜுவேந்திர சஹல் 63 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். ஸ்காட்லாந்துக்கு எதிராக15 ரன்களுக்கு 3 விக்கெட் வீழ்த்தியதே ஜடேஜாவின் சிறந்தபந்துவீச்சாகும். இதற்கு முன் கடந்த 2014ம் ஆண்டில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்த ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருதும் ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது. டி20 போட்டிகளில் ஜடேஜா பெறும் 2-வது ஆட்டநாயகனஅ விருதாகும். இதற்கு முன் கடந்த 2012ம் ஆண்டு மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜடேஜா ஆட்டநாயகன் விருது வென்றிருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி பட்டியலில் 4 புள்ளிகளுடன் 1.619 ரன் ரேட்டுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணி 2-வது இடத்தில் இருந்தாலும் புள்ளிகள் அடிப்படையில் நியூஸிலாந்து அணிதான் 2-வது இடத்தில் இருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory