» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் டுவெயின் பிராவோ ஓய்வு

வெள்ளி 5, நவம்பர் 2021 5:13:29 PM (IST)

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் டுவெயின் பிராவோ அறிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்-ரவுண்டர் டுவெயின் பிராவோ நடப்பு டி20 உலகக்கோப்பையில் விளையாடி வருகிறார். இவர் இதுவரை 90 டி-20 போட்டிகளில் விளையாடி 1245 ரன்கள் குவித்து 78 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.  40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2200 ரன்களும், 86 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 164 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2968 ரன்களும், 199 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில், 38 வயதான டுவெயின் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பிராவோ அறிவித்துள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுடன் நாளை வெஸ்ட் இண்டீஸ் மோதும் போட்டியே பிராவோவின் கடைசி சர்வதேச போட்டியாகும்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory