» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி-20 உலக கோப்பை: பாகிஸ்தான் ஹாட்ரிக் வெற்றி - ஆசிப் அலி புதிய சாதனை

சனி 30, அக்டோபர் 2021 12:13:35 PM (IST)



ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் 7 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை வென்றதன் மூலம் பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கெனவே இந்தியா, நியூஸி. அணிகளை வென்றுள்ள பாகிஸ்தான் தொடா்ந்து ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. துபையில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. பிறகு பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

12 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்கிற இக்கட்டான நிலைமையில் கரிம் ஜனத் வீசிய 19-வது ஓவரில் 4 சிக்ஸர்கள் அடித்து பாகிஸ்தான் அணிக்கு அற்புதமான வெற்றியை வழங்கினார் 30 வயது ஆசிப் அலி.  7 பந்துகளில் 25 ரன்கள் எடுத்த ஆசிப் அலி, ஆட்ட நாயகன் விருதைக் கைப்பற்றினார்.

இந்நிலையில் முழுமையாக நடைபெற்ற டி20 ஆட்டத்தில் குறைந்த பந்துகளை எதிர்கொண்டு ஆட்ட நாயகன் விருதை வென்ற வீரர் என்கிற புதிய சாதனையைப் படைத்துள்ளார் ஆசிப் அலி. இதற்கு முன்பு இந்தியாவின் தினேஷ் கார்த்திக், நிடாஹஸ் கோப்பைப் போட்டி இறுதிச்சுற்றில் வங்கதேசத்துக்கு எதிராக 8 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். அவருடைய சாதனையை முறியடித்துள்ளார் ஆசிப் அலி. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory