» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தினேஷ் கார்த்திக் - தீபிகா பல்லிகல் தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தைகள்

வெள்ளி 29, அக்டோபர் 2021 3:37:49 PM (IST)கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் - தீபிகா பல்லிகல் தம்பதியருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன.

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில், "மூன்றாக இருந்த நாங்கள் ஐந்தாக ஆகியுள்ளோம். நானும் தீபிகாவும் இரட்டை ஆண் குழந்தைகளுக்குப் பெற்றோர்களாக ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். மேலும், அக்குழந்தைகளுக்கு கபிர் பலிக்கல் கார்த்திக், சியான் பலிக்கல் கார்த்திக் என்று பெயரிட இருப்பதாக தினேஷ் கார்த்திக் பகிர்ந்துள்ளார்.

தினேஷ் கார்த்திக், தீபிகா பலிக்கல் ஆகியோருக்கு இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தினேஷ் கார்த்திக் மற்றும் தீபிகா பல்லிகலுக்கு கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. 36 வயதான தினேஷ் கார்த்திக் ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார். ஐபிஎல் மட்டுமல்லாது, சையத் முஷ்டாக் அலி டிராபி போன்ற இந்தியத் தொடர்களில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் கிரிக்கெட் வர்ணையாளராகவும் இருந்து வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory