» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

முழங்காலிட மறுத்த விவகாரம்: டி காக் விளக்கம்

வியாழன் 28, அக்டோபர் 2021 3:41:47 PM (IST)இனவெறிக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்க ஆதரவு தெரிவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு தென் ஆப்பிரிக்க வீரர் டி காக் விளக்கம் அளித்துள்ளார். 

உலகக்கோப்பையில் விளையாடும் அணிகள் இனவெறிக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழங்காலிட்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என ஐ.சி.சி. தெரிவித்திருந்தது. இதற்கு அனைத்து கிரிக்கெட் போர்டுகளும் ஆதரவு தெரிவித்தன. இதனால் ஒவ்வொரு போட்டிகள் தொடங்குவதற்கும் முன்பாக, இரு அணி வீரர்களும் முழங்காலிட்டு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

தென்ஆப்பிரிக்கா அணி முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடியது. அப்போது தென்ஆப்பிரிக்கா அணி விக்கெட் கீப்பர் டி காக் முழங்காலிட்டு ஆதரவு தெரிவிக்க மறுத்துவிட்டார். இதனால் சர்ச்சை வெடித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது போட்டிக்கு முன் அவர் அணியில் இருந்து விலகினார். இந்த நிலையில் அடுத்த போட்டியில் இருந்து டி காக் விளையாடுவார் என தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. மேலும், இதுகுறித்து டி காக் விளக்கம் அளித்துள்ளார்.

டி காக் அளித்துள்ள விளக்கத்தில் ‘‘நான் ஒரு கலப்பு இன குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதை அறியாதவர்களுக்காக என்னுடைய சக வீரர்கள் மற்றும் நாட்டு ரசிகர்களிடம் வருத்தம் சொல்வதுடன் ஆரம்பிக்க  விரும்புகிறேன். என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரிகள் வெள்ளை நிறத்தை சேர்ந்தவர்கள். என்னுடைய வளர்ப்பு தாயார் கருப்பு இனத்தை சேர்ந்தவர். என்னை பொறுத்த வரைக்கும் பிறந்தததில் இருந்து இனவெறிக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என விவகாரம் இருந்து வருகிறது.

நம் அனைவருக்கும் உரிமைகள் உள்ளன. அவை முக்கியமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன். அவர்கள் உரிமைக்காக, இந்த வழியில் நாம் இவ்வாறு செய்ய வேண்டும் என்று என்னிடம் சொல்லும்போது,  என்னுடைய உரிமை பறிக்கப்படுவதாக உணர்கிறேன்.’’ என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory