» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அயர்லாந்துக்கு எதிராக அபார வெற்றி: சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது இலங்கை அணி!

வியாழன் 21, அக்டோபர் 2021 11:39:15 AM (IST)



அபு தாபியில் நேற்று நடந்த உலகக் கோப்பைபப் போட்டியின் ஏ பிரிவு தகுதிச் சுற்றில் அயர்லாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுக்குள் சென்றது.

முதலில் பேட் செய்தஇலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது. 172 ரன்கள் சேர்்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 18.3 ஓவர்களி்ல் 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி ஏ பிரிவில் 4 புள்ளிகளுடன், நல்ல ரன்ரேட்டில் சூப்பர் 12 பிரிவுக்கு தகுதி பெற்றது. ஆனால், வெற்றிபெற்ற நிலையிலும்இலங்கை அணி சிக்கலில் சிக்கிக்கொண்டது.

ஏனென்றால், ஏ பிரிவில் முதலிடம் பெறும் அணி சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 பிரிவில் இடம் பெறும். குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மே.இ.தீவுகள் என ஜாம்பவான்கள் இருக்கும் இடத்தில் இலங்கை சிக்கிவிட்டது. இந்த 4 அணிகளையும் இப்போதிருக்கும் இலங்கை அணியால் வீழ்த்துவது எளிதல்ல. இந்த 4 அணிகளையும் வலுவாக எதிர்க்கும் பேட்ஸ்மேன்களும், பந்துவீச்சாளர்களும் இலங்கையிடம் இல்லை என்பதுதான் நிதர்சனம். தகுதிச் சுற்றில் தப்பித்து சூப்பர்-12 சுற்றுக்குள் வந்த இலங்கைக்கு சோதனைக்கு மேல் சோதனை காத்திருக்கிறது.

அதேபோல பி பிரிவு தகுதிச் சுற்றில் 2வது இடம்பிடிக்கும் அணியும் சூப்பர்-12 சுற்றில் ஏ பிரிவில் இடம் பிடிக்கும். அந்தவகையில் வங்கதேசம் வருவதற்கு வாய்ப்புள்ளது. ஏற்கெனவே இலங்கை சிக்கி சின்னாபின்னமாகப் போகும் நிலையில்,வங்கதேசமும் உள்ளே வரும். ஆனால், இந்தியா, பாகிஸ்தான் அணி இடம் பெற்றுள்ள சூப்பர்-12 குருப்-2 பிரிவில், ஸ்காட்லாந்து அணியும், ஏ பிரிவில் 2-வது இடம் பிடிக்கும் அணியும் வரும். அயர்லாந்து அணிக்கு அடுத்து நமிபியா அணியுடன் கடைசிப் போட்டி இருக்கிறது இதில் வென்றால் குரூப்-2 பிரிவில் இடம் பிடிக்கும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory