» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி20 உலக கோப்பை கிரிக்கெட் : ஆலோசகராக பணியை தொடங்கினார் தோனி!

திங்கள் 18, அக்டோபர் 2021 11:34:08 AM (IST)டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக தோனி தனது பணியை தொடங்கினார்.  

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் டி-20  உலகக் கோப்பைப் போட்டிகள் நேற்று தொடங்கியது. நவம்பர் 14ம் தேதி வரை இந்தத் தொடர் நடைபெறுகிறது. 20 ஓவர் உலக கோப்பையில் 24-ம் தேதி நடக்கும் முதல் பிரதான சுற்றில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி  எதிர்கொள்கிறது. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற தோனி,  டி-20 உலக கோப்பைப் போட்டிக்காக மட்டும் இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். 

தோனியின் அனுபவம், தலைமைப் பண்பு, முடிவெடுக்கும் திறமை போன்றவை வீரர்களுக்கு சரியான விதத்தில் துணை புரியும் என்பதால், இந்த முடிவை பிசிசிஐ எடுத்தது. ஆலோசகராக பணிபுரிய ஊதியம் எதுவும் தேவையில்லை என தோனி கூறிவிட்டார். இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியில் ஆலோசகராக தோனி தனது பணியை துவங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை நேற்று பிசிசிஐ வெளியிட்டது. 

பிசிசிஐ தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "கிங் தோனிக்கு அன்பான வரவேற்பு அளிக்கிறோம். புதிய பணியுடன் இந்திய அணியில் தோனி மீண்டும் இணைந்து விட்டார்” என பதிவிடப்பட்டுள்ளது. பிசிசிஐயின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory