» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் புதிய சீருடை அறிமுகம்!

புதன் 13, அக்டோபர் 2021 4:43:43 PM (IST)டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட உள்ள இந்திய அணியின் புதிய சீருடையை பிசிசிஐ அறிமுகம் செய்துள்ளது.

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. 

இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்தபிறகு அதிலிருந்து தேர்வாகும் 4 அணிகள், ஏற்கெனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றான சூப்பர் 12-ல் அக்டோபர் 23 முதல் போட்டியிடவுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை ஆகஸ்ட் 24 அன்று பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது. 

இந்நிலையில் இந்திய அணியின் புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியின் புதிய சீருடையை கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா, ராகுல், பும்ரா ஆகியோர் அணிந்து அறிமுகம் செய்யும் புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி வீரர்கள் இந்தச் சீருடையை அணிந்து விளையாடுவார்கள். புதிய சீருடை பற்றிய தங்கள் கருத்துகளை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory