» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு சொந்த கிராமத்தில் உற்சாக வரவேற்பு

ஞாயிறு 12, செப்டம்பர் 2021 8:13:04 PM (IST)பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு அவரது சொந்த கிராமத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, கடந்த 2016ல் ரியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார். இந்த முறை டோக்கியோவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவரது சாதனைக்கு மத்திய அமைச்சர்கள், கிரிக்கெட் பிரபலங்கள், தமிழக முதல்வர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் நரேந்திர மோடி பாராலிம்பிக் வீரர்களுடன் கலந்துரையாடலும் நிகழ்த்தினார். 

இந்நிலையில், மாரியப்பன் தனது சொந்த கிராமமான பெரிய வடகம்பட்டிக்குத் திரும்பியபோது தீவட்டிபட்டி நான்கு சாலைப் பகுதியில் ஊர் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக, சென்னை வந்தபோது விமான நிலையத்தில் தமிழக பாராலிம்பிக் சங்கம் சார்பில் மாரியப்பனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory