» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கால்பந்து போட்டி: கோவில்பட்டி அணி முதலிடம்

புதன் 25, ஆகஸ்ட் 2021 8:29:26 AM (IST)கோவில்பட்டியில் நடைபெற்ற வட்டார கால்பந்து போட்டியில் ஸ்பாட்டன் அணி முதலிடம் பெற்றது.

கோவில்பட்டி கால்பந்து கழகம் சாா்பில் ஆா்.பி.சண்முகையா பாண்டியனாா் நினைவு ஐவா் கால்பந்து போட்டி நடைபெற்றது. 14 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கான இப்போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் கோவில்பட்டி ஸ்பாட்டன் கால்பந்து கழக அணி, கோவில்பட்டி கால்பந்து கழக அணியும் விளையாடின. இதில், 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பாட்டன் அணி முதலிடம் பெற்றது. பசும்பொன் அணி 3-ஆம் இடம்பெற்றது.

பின்னா், நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு கால்பந்து கழகச் செயலா் தேன்ராஜா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சந்தோஷ், உறுப்பினா் விக்கி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், முதலிடம் பெற்ற ஸ்பாட்டன் அணிக்கு கால்பந்து கழக துணைத் தலைவா் சீதாலட்சுமி கேடயம் வழங்கினாா். 2 மற்றும் 3 ஆம் இடம்பெற்ற அணிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory