» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தொடர்ந்து 75 மணி நேரம் ஸ்கேட்டிங் செய்து சாதனை: மாணவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாராட்டு

திங்கள் 23, ஆகஸ்ட் 2021 4:05:57 PM (IST)தூத்துக்குடியில் தொடர்ந்து 75 மணி நேரம் ஸ்கேட்டிங் செய்து சாதனை படைத்த பள்ளி மாணவ மாணவிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.

தூத்துக்குடியில் சக்தி விநாயகர் பள்ளி உள்விளையாட்டு அரங்கில் ராஜோ பாக்சிங் ரூ பிட்னஸ் கிளப், கிரிட்டி ஆர்ட்ஸ் ரூ டான்ஸ் ஸ்டுடியோ மற்றும் சிகரம் ரோலர் ஸ்கேட்டிங் சார்பாக தூத்துக்குடியை சேர்ந்த 5 முதல் 18 வயது பள்ளி மாணவ மாணவிகள் 34 பேர் கலந்து கொண்டு தொடர்ந்து 75 மணி நேரம் ஸ்கேட்டிங் செய்து சாதனை நிகழ்த்தியுள்ளனர். இந்த சாதனையை பாராட்டி யுனிகோ வேர்ல்டு நிறுவனம் சான்றிதழ் வழங்கி உலக சாதனையில் இடம்பெற செய்துள்ளது.

உலக சாதனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நீண்ட நேரம் தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்து உலக சாதனை நிகழ்த்திய பள்ளி மாணவர்கள் தூத்துக்குடி வடக்கு காவல் நிலைய தலைமை காவலர் சிக்டஸ் ஜெனீவர் என்பவரது மகன் யாபேல், ஜேக்சன் ஜியோ, ஷானிஜோ, அந்தோணி ஜெப்ரீன், சுஜய் பாலா, ஸிபித் வாஷ், குரு சித்தார்த் ஆகிய 7 மாணவர்கள் இன்று (23.08.2021) மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமாரைநேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாதனை நிகழ்த்திய மாணவர்களை பாராட்டி மென்மேலும் வெற்றிகள் பெற வாழ்த்தினார். இந்நிகழ்வின் போது ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி நிறுவனத்தின் பயிற்சியாளர் ஜோசப்ராஜ் மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory