» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்தியா சிறப்பான பந்துவீச்சு: 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து அணி!

வியாழன் 5, ஆகஸ்ட் 2021 8:58:12 AM (IST)இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 183-ரன்களுக்கு ஆட்டமிழந்தது 
.
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று (புதன்கிழமை)  தொடங்கியது.  இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பந்து வீசிய இந்திய அணி, தனது துல்லியமான பந்து வீச்சால் இங்கிலந்து அணியை நிலைகுலையவைத்தது. 

பும்ரா, சமி ஆகியோர் இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களை சீரான இடைவெளியில் வெளியேற்றினர்.  65.4-ஓவர்கள் தாக்குப் பிடித்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 183- ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 64 ரன்கள் அடித்தார். பந்து வீச்சை பொருத்தவரை பும்ரா 4 விக்கெட்டுகளையும் சமி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை துவங்கியது. ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித், ராகுல் தலா 9 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory