» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இலங்கை தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்: பிசிசிஐ அறிவிப்பு

செவ்வாய் 15, ஜூன் 2021 3:49:28 PM (IST)

இலங்கைச் சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதிபடுத்தியுள்ளார்.

இந்திய அணி அடுத்த மாதம் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற முன்னணி வீரர்கள் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்பதால், இலங்கைக்கு எதிரான தொடர்களுக்கு ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இலங்கைக்குச் செல்லவுள்ள இந்திய வீரர்கள் அனைவரும் திங்கள் முதல் அடுத்த இரு வாரங்களுக்கு மும்பையில் உள்ள தனியார் விடுதியில் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளார்கள். இரு வாரங்களுக்குப் பிறகு ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணி ஜூன் 28 அன்று இலங்கைக்குச் செல்லவுள்ளது. அங்கு தனியார் விடுதியில் மேலும் மூன்று நாள்களுக்கு இந்திய வீரர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்படுகிறார்கள். அதன்பிறகு பயிற்சியைத் தொடங்குவார்கள்.

இந்தியா - இலங்கை அணிகள் பங்கேற்கும் ஒருநாள் தொடர், ஜூலை 13 அன்று தொடங்கி, ஜூலை 18 அன்று நிறைவுபெறுகிறது. டி20 தொடர் ஜூலை 21 அன்று தொடங்கி, ஜூலை 25 அன்று நிறைவுபெறுகிறது. அனைத்து ஆட்டங்களும் கொழும்பில் நடைபெறவுள்ளன.

இலங்கைச் சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தேர்வு செய்யப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இத்தகவலை பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதிபடுத்தியுள்ளார். இலங்கையில் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்படுவார் என கங்குலி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதற்கு முன்பு இந்தியா ஏ, இந்தியா யு-19 அணிகளின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பணியாற்றியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory