» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அஸ்வின் அபாரம்: 134 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து

ஞாயிறு 14, பிப்ரவரி 2021 5:20:58 PM (IST)சென்னையில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அஸ்வின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சென்னை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 59.5  ஓவர்களுக்கு 134 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் திடலில் நேற்று (பிப்.13) தொடங்கியது. முதலில் ஆடிய இந்திய அணி 329 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ரோகித் சர்மா 161 ரன்களும்,  ரஹானே 67 ரன்களும், ரிஷப் பந்ட் ஆட்டமிழக்காமல் 58 ரன்களும் எடுத்தனர். மொயின் அலி 4 விக்கெட் வீழ்த்தினார்.பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணியினரின் அபார பந்து வீச்சால் இங்கிலாந்து தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

அஸ்வின் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டோக்ஸ், ஃபோக்ஸ் மட்டுமே தாக்குப்பிடித்து ஆடிய நிலையில், அவர்களுக்கு பிறகு களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களிலேயே வெளியேறினர்.இந்திய அணிகள் சார்பில் அஸ்வின் 5, இஷாந்த் சர்மா, அக்ஸார் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து இந்திய அணி 195 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தாெடங்கியது. இன்றைய ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 54ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory