» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
மலிங்காவை விடுவித்தது ஏன்? மும்பை இந்தியன்ஸ் விளக்கம்
வியாழன் 21, ஜனவரி 2021 12:08:44 PM (IST)
ஐபிஎல் 2021 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைத்துள்ள 18 வீரர்களின் பட்டியலில் மலிங்கா இடம்பெறவில்லை

ஐபிஎல் ஆரம்பிக்கப்பட்ட 2008 முதல் 12 வருடங்களாக மும்பை அணிக்காக விளையாடியவர் மலிங்கா. ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவரும் மலிங்கா தான். 122 ஆட்டங்களில் 170 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எகானமி - 7.14. இதையடுத்து இதற்கான காரணத்தை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: லீக் போட்டிகளில் இருந்து மலிங்கா விலகியுள்ளார். இந்த மாதத் தொடக்கத்தில் மலிங்கா இத்தகவலைத் தெரிவித்தார். இதனால் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலில் இருந்து அவர் விலகினார். மலிங்காவின் முடிவை நாங்கள் மதிக்கிறோம். இதனால் தான் மும்பை அணி தக்கவைத்துள்ள 18 வீரர்களின் பட்டியலில் அவர் இடம்பெறவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
குடும்பத்தினருடன் கலந்து பேசி இந்த முடிவை எடுத்துள்ளேன். கரோனா அச்சுறுத்தல் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களால் என்னால் லீக் போட்டிகளில் பங்கேற்க முடியாது. எனவே தான் ஓய்வு அறிவிப்பை வெளியிடுகிறேன். 12 வருடங்களாக எனக்கு ஆதரவு அளித்த மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்துக்கு நன்றி என்று ஓர் அறிக்கையில் மலிங்கா கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் ரவி சாஸ்திரி!!
செவ்வாய் 2, மார்ச் 2021 5:47:16 PM (IST)

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: அஸ்வின், ரோகித் சர்மா முன்னேற்றம்
திங்கள் 1, மார்ச் 2021 12:05:28 PM (IST)

சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் மீது விமா்சனம் எழுவது ஏன்? நாதன் லயன் கேள்வி
திங்கள் 1, மார்ச் 2021 11:10:57 AM (IST)

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு: யூசுப் பதான் அறிவிப்பு
வெள்ளி 26, பிப்ரவரி 2021 5:42:37 PM (IST)

இங்கிலாந்திற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அவார வெற்றி!
வியாழன் 25, பிப்ரவரி 2021 8:48:43 PM (IST)

அக்ஷர் பட்டேல் 6 விக்கெட் : 112 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து அணி
வியாழன் 25, பிப்ரவரி 2021 8:47:16 AM (IST)
