» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கர்ப்பகாலத்தில் தலைகீழாக யோகாசனம் செய்த அனுஷ்கா: கால்களை பிடித்து உதவிய விராட் கோலி

திங்கள் 30, நவம்பர் 2020 10:25:16 AM (IST)நடிகையும், கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

நடிகர் அனுஷ்கா சர்மாவிற்கும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் கடந்த 2017ம் வருடம் திருமணம் நடந்தது. பல வருடங்களாக காதலில் இருந்த இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தற்போது அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருக்கிறார். அனுஷ்கா சர்மா கர்ப்பமாக உள்ள நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் இருந்து விராட் கோலி பாதியில் வெளியேறி விட்டார்.அனுஷ்கா சர்மாவிற்கு குழந்தை பிறக்கும் போது உடன் இருக்க வேண்டும் என்பதற்காக கோலி விடுப்பு எடுத்து உள்ளார். இந்த நிலையில் விராட் கோலியோடு இணைந்து அனுஷ்கா சர்மா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று  வைரலாகி உள்ளது.

அனுஷ்கா சினிமாவிலும், விராட் கிரிக்கெட்டிலும் பிஷியாக இருந்தாலும் இருவரும் தங்களது அன்பை பரிமாறிக் கொள்வதில் எப்போதும் தவறியதில்லை.இதற்கு உதராணமாக யோகா செய்யும் போது தனது கால்களை பிடித்திருக்கும் விராட் கோலியின் புகைப்படத்தை அனுஷ்கா தனது இன்ஷ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் அனுஷ்கா சர்மா யோகாசனம் செய்கிறார். மிகவும் கடினமான சிரசாசனம் செய்துள்ளார். தலைகீழாக நின்று காலை மேலே தூக்கி அனுஷ்கா சர்மா இந்த யோசனம் செய்துள்ளார். இவருடன் கோலி உதவிக்கு நின்றார்.

கர்ப்பகாலத்தில் தலைகீழாக யோகாசனம் செய்த தனது மனைவி அனுஷ்கா சர்மாவின் காலை பிடித்து கனிவுடன் பாசம் காட்டிய விராட் கோலியின் வெளியாகி உள்ளது.இந்த புகைப்படம் தற்போது எடுக்கபடவில்லை என்பதால் #throwback என்ற ஹேஸ்டேகை அனுஷ்கா குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அனுஷ்கா மருத்துவரின் அறிவுரையின்படியே இந்த யோகாசனங்கள் செய்தேன். மேலும் இந்த யோகாசனங்கள் செய்யும் யோகா ஆசிரியர் என்னுடன் இருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory