» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் மீது பாலியல் புகார்

ஞாயிறு 29, நவம்பர் 2020 9:11:21 AM (IST)

10 வருடமாக தன்னை ஏமாற்றியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசாம் மீது இளம்பெண் பாலியல் புகார் கூறி உள்ளார். 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம். தற்போது பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் பாபர் அசாம் மீது இளம்பெண்  ஒருவர் பாலியல் புகார் கூறி உள்ளார்.  இதுகுறித்து  அந்த பெண் கூறுகையில், பாபர் அசாம் பிரபலமான கிரிக்கெட் வீரராக இல்லாதபோதே எனக்குத் தெரியும். நானும், பாபரும் பள்ளியில் ஒன்றாகப் படித்தோம். கடந்த 2010ல் பாபர் என்னிடம் காதலைத் தெரிவித்தார்.

நாங்கள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தோம், எங்கள் குடும்பங்களுக்கும் தகவல் கொடுத்தோம், ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர்.  பின்னர் பாபரும் நானும் நீதிமன்றம் மூலம்  திருமணம் செய்ய முடிவு செய்தோம். 2011 ஆம் ஆண்டில், என்னை  திருமணம் செய்வதாக உறுதியளித்து  என்னை வாடகைக்கு பல இடங்களில் தங்க வைத்தார். அந்த நேரத்தில், நான் அவரை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டே இருந்தேன்,

என்னைத் திருமணம் செய்வதாக உறுதியளித்த பாபர், என்னுடன் பாலியல் உறவு வைத்து கர்ப்பமாக்கினார். நான் கர்ப்பமானதை வெளியில் கூறக்கூடாது என மிரட்டினார், அடித்தார். பாபர், பின்னர், தனது நண்பர்களின் உதவியுடன் கருக்கலைப்பு செய்தார்.2017 இல், நான் பாபருக்கு எதிராக நசிராபாத் போலீஸ் நிலையத்தில் போலீஸ் புகார் அளித்தேன்.எனக்கு பாபர் அசாமிடம் இருந்து நீதி கிடைக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டால் பாபர் அசாமுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இந்த குற்றச்சாட்டுகளுக்கு பாபர்  தரப்பில் இருந்தோ அல்லது  கிரிக்கெட் வாரிய தரப்பில் இருந்தோ இன்னும் பதிலளிக்கவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory