» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆரோன் பிஞ்ச், ஸ்டீவ் ஸ்மித் அபார சதம் இந்தியாவை வீழ்த்தியது ஆஸி..!

வெள்ளி 27, நவம்பர் 2020 5:39:04 PM (IST)சிட்னியில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி கேப்டன் ஆரோன் பிஞ்ச் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் சதங்கள் விளாச, இந்தியாவை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதியது ஆஸ்திரேலியா. 

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடவுள்ளது. ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. டிசம்பர் 4 முதல் டி20 தொடரும் டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடரும் தொடங்குகின்றன. சிட்னியில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆஸி கேப்டன் ஆரோன் பிஞ்ச் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் சதங்கள் விளாசினர். ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 374 ரன்கள் எடுத்தது. 

பின்னர் ஆடிய இந்திய அணி இந்திய அணியின் இன்னிங்ஸில் முதல் ஓவரிலேயே 20 ரன்கள் கிடைத்தது. 4 வைட்களும் ஒரு நோ பாலும் வீசினார் ஸ்டார்க். அடுத்த ஓவரில் மேலும் 12 ரன்கள். இதனால் 4.1 ஓவரிலேயே இந்திய அணி 50 ரன்களை எட்டியது. ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் என அதிரடியாக விளையாடிய மயங்க் அகர்வால் 22 ரன்களில் ஹேஸில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கோலி 21 ரன்களிலும் ஷ்ரேயஸ் ஐயர் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள்.  பிறகு ஸாம்பா பந்துவீச்சில் 12 ரன்களுடன் ராகுலும் வெளியேற 105 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. இதன்பிறகு ஜோடி சேர்ந்த ஷிகர் தவனும் பாண்டியாவும் பொறுப்புடன் விளையாடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். அவ்வப்போது சிக்ஸரும் பவுண்டரியும் அடித்து ரன்ரேட் குறையாமல் பார்த்துக்கொண்டார் பாண்டியா. இதனால் 31 பந்துகளில் அரை சதமெடுத்தார். தவன் அரை சதமெடுக்க 55 பந்துகள் தேவைப்பட்டன. 

ஸாம்பா பந்துவீச்சில் 74 ரன்களில் ஆட்டமிழந்தார் தவன். இதன்பிறகு ரன்கள் எடுக்கும் வேகம் குறைந்தது. சதத்தை நெருங்கிய வேளையில் சிக்ஸர் அடிக்க முயன்று ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து ஸாம்பா பந்துவீச்சில் 90 ரன்களில் ஆட்டமிழந்தார் பாண்டியா. இதன்மூலம் வெற்றிக்கான இந்திய அணியின் போராட்டம் முடிவுக்கு வந்தது.  இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்தது. 

இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் ஒருநாள் ஆட்டத்தில் 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆஸி. பந்துவீச்சாளர்களில் ஸாம்பா 4 விக்கெட்டுகளையும் ஹேஸில்வுட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.  2-வது ஒருநாள் ஆட்டம் சிட்னியில் நவம்பர் 29 அன்று நடைபெறுகிறது.  மார்ச் மாதத்துக்குப் பிறகு இரு அணிகளும் ரசிகர்களின் முன்னிலையில் விளையாடி வருகிறார்கள். மைதானத்தின் இருக்கைகள் எண்ணிக்கையில் 50% அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் மெல்ல மெல்ல பழைய நிலைமைக்குத் திரும்பி வருவதாக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory