» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல் தொடரிலிருந்து ஹர்பஜன் சிங் விலகல்

வெள்ளி 4, செப்டம்பர் 2020 5:09:45 PM (IST)சுரேஷ் ரெய்னாவைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகியுள்ளார்.

கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

கடந்த வாரம், இரண்டு வீரர்கள் உள்பட சிஎஸ்கேவைச் சேர்ந்த 13 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. தற்போது எடுக்கப்பட்ட மூன்று பரிசோதனைகளில் எந்தவொரு சிஎஸ்கே வீரருக்கும் கரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனால் இன்று முதல் அனைவரும் பயிற்சியில் பங்கேற்கிறார்கள். 

சிபிஎல், சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் சில வீரர்கள் தவிர அனைத்து சிஎஸ்கே வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்துள்ளார்கள். எனினும் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மட்டும் இந்தியாவிலிருந்து இன்னும் புறப்படாமல் இருந்தார். ஹர்பஜன் சிங்கின் தாயாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது இதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. 

இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து ஹர்பஜன் சிங் விலகியுள்ளார்.  இதுபற்றி ட்விட்டரில் அவர் கூறியதாவது: அருமை நண்பர்களே, தனிப்பட்ட காரணங்களால் இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளேன். இது கடினமான நேரம். சிஎஸ்கே நிர்வாகம் மிகுந்த ஒத்துழைப்பை அளித்துள்ளது. அவர்களுக்குச் சிறந்த ஐபிஎல் போட்டி அமையவேண்டும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார். சுரேஷ் ரெய்னாவுக்கு அடுத்ததாக ஹர்பஜன் சிங்கும் விலகியுள்ளதால் சிஎஸ்கே அணியில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory