» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கரோனா வைரஸால் ஐ.பி.எல். போட்டிகள் தள்ளிப்போகுமா? கங்குலி திட்டவட்டம்

செவ்வாய் 10, மார்ச் 2020 4:40:20 PM (IST)

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தள்ளி வைக்கப்படமாட்டாது என கங்குலி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. கரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவுவதால் இந்த போட்டி தள்ளி வைக்கப்படலாம் என்ற சந்தேகம் கிளம்பி இருக்கிறது. இதற்கிடையில் மராட்டிய மாநில சுகாதார துறை மந்திரி ராஜேஷ் டோப் அளித்த ஒரு பேட்டியில், ‘மக்கள் ஒரு இடத்தில் அதிக அளவில் கூடும் போது அங்கு ஒருவருக்கு கரோனா வைரஸ் தாக்கம் இருந்தாலும் அது வேகமாக மற்றவர்களுக்கு பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே சிறிது காலத்துக்கு மக்கள் கூடும் நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும். 

எனவே ஐ.பி.எல். போட்டியை தள்ளி வைக்கலாமா? என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது’ என்று கூறியிருந்தார். இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில், ‘ஐ.பி.எல். போட்டியை தள்ளி வைக்கும் எண்ணம் எதுவுமில்லை. போட்டி திட்டமிட்டபடி நடைபெறும். இந்த போட்டியுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் போட்டிக்கு முன்னதாகவும், போட்டியின் போதும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்துள்ளது. கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக மேற்கொள்ளும்’ என்றார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory