» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

புடவை அணிந்து கிரிக்கெட் விளையாடும் மிதாலிராஜ் : இணையத்தில் வைரலான விடியோ

வியாழன் 5, மார்ச் 2020 7:05:09 PM (IST)

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மித்தாலி ராஜ் புடவை அணிந்து கிரிக்கெட் விளையாடும் விடியோ ஒன்று, இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மித்தாலி ராஜ். இந்நிலையில் இன்று வெளியான மித்தாலி ராஜ் புடவை அணிந்து கிரிக்கெட் விளையாடும் விடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.அந்த விடியோவில் மித்தாலி இந்தியாவின் பாரம்பரிய உடையான சேலையை அணிந்து கொண்டு, கிரிக்கெட் உபகரணங்களுடன் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. 

அத்துடன் தற்போது நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இறுதிப்போட்டியில் விளையாட உள்ள இந்திய அணிக்கு  வாழ்த்து சொல்லலும் விதமான வாசகங்களும் இடம்பெற்றுள்ளது. மகளிர் தினத்தினை முன்னிட்டு இந்த விடியோ  வெளியிடப்பட்டு வைரலாகப் பரவி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory