» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் பாலோயர்ஸ்: இந்திய பிரபலங்களில் கோலி முதலிடம்

செவ்வாய் 18, பிப்ரவரி 2020 11:38:20 AM (IST)

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சமூக வலைத்தளங்களில் துடிப்பாக இயங்கி வருகிறார்.  குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தான் செல்லும் இடங்களில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.  இதனால், இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை கோடிக்கணக்கானோர் பின் தொடர்கின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து 

தற்போது, 50 (5 கோடி) மில்லியன் ஆக உள்ளது. இதன் மூலம்,  இன்ஸ்டாகிராமில் 5 கோடி பின் தொடர்பவர்களை பெற்ற முதல் இந்திய பிரபலம் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். 31  வயதான விராட் கோலி, இன்ஸ்டாகிராமில் இதுவரை 930 புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ஒட்டுமொத்தமாக இன்ஸ்டாகிராமில் அதிக பின் தொடர்பவர்களை கொண்டவராக  கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனோல்டா விளங்குகிறார். போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த ரோனோல்டா 200 மில்லியன் (20 கோடி) பின் தொடர்பவர்களை (பாலோயர்ஸ்) பெற்றுள்ளார்.  இந்திய அளவில் விராட் கோலிக்கு அடுத்த இடத்தில் , பாலிவுட் நட்சத்திரம் பிரியங்கா சோப்ரா (49.9 மில்லியன்) உள்ளார். 3  வது இடத்தில் தீபிகா படுகோனே (44.1 மில்லியன்கள்) உள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory