» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
கோலிக்குச் சுதந்திரம் அளித்து கோப்பையை வெல்லுங்கள்: ஆர்சிபிக்கு விஜய் மல்லையா அட்வைஸ்!
சனி 15, பிப்ரவரி 2020 5:03:49 PM (IST)
கோலிக்குச் சுதந்திரத்தை அளியுங்கள். எல்லா ஆர்சிபி ரசிகர்களும் ஐபிஎல் கோப்பைக்காக நீண்ட நாள் காத்திருக்கிறார்கள் என்று விஜய் மல்லையா கூறியுள்ளார்.

இந்த வருட ஐபிஎல் போட்டியையாவது வெல்வோமா என்கிற ஆர்சிபி ரசிகர்களின் ஏக்கத்தைப் போக்க ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது ஆர்சிபி அணி. அதன்படி, லோகோவின் வடிவத்தை மாற்றியுள்ளார்கள். இந்தப் புதிய லோகோ அணிக்கு ராசியாக அமையும் என நம்புகிறது ஆர்சிபி அணி. இந்நிலையில் லோகோ மாற்றம் குறித்து ஆர்சிபி அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா கூறியதாவது: புதிய லோகோ அபாரமாக உள்ளது. ஆனால் கோப்பையை வெல்லுங்கள். யு-19 அணியிலிருந்து ஆர்சிபி அணிக்கு வந்தார் கோலி. இந்திய அணியின் சிறந்த கேப்டனாகவும் திறமைசாலியாகவும் உள்ளார். அவரிடம் விட்டுவிடுங்கள். அவருக்கான சுதந்திரத்தை அளியுங்கள். எல்லா ஆர்சிபி ரசிகர்களும் ஐபிஎல் கோப்பைக்காக நீண்ட நாள் காத்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் வாங்கிய விஜய் மல்லையா, அதைத் திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பியோடி விட்டாா். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிடக்கோரி, லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்திய அரசு வழக்கு தொடுத்தது. அதை விசாரித்த நீதிமன்றம், மல்லையாவை நாடு கடத்த அனுமதித்து உத்தரவிட்டது. இதை எதிா்த்து மல்லையா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உயா்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக ஆட வேண்டும் - வாஷிங்டன் சுந்தர் விருப்பம்
திங்கள் 25, ஜனவரி 2021 5:09:47 PM (IST)

சிஎஸ்கே அணியில் 35 வயது ராபின் உத்தப்பா: ரசிகர்கள் அதிருப்தி!
வெள்ளி 22, ஜனவரி 2021 4:38:01 PM (IST)

சென்னையில் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
வெள்ளி 22, ஜனவரி 2021 3:47:12 PM (IST)

தமிழக வீரர் நடராஜனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு : மக்கள் வெள்ளம் திரண்டது
வெள்ளி 22, ஜனவரி 2021 10:26:39 AM (IST)

தோனியுடன் என்னை ஒப்பிடாதீர்: ரிஷாப் பண்ட்
வெள்ளி 22, ஜனவரி 2021 10:25:16 AM (IST)

மலிங்காவை விடுவித்தது ஏன்? மும்பை இந்தியன்ஸ் விளக்கம்
வியாழன் 21, ஜனவரி 2021 12:08:44 PM (IST)
