» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசை: முதலிடத்தை இழந்தார் பும்ரா; தக்கவைத்தார் கோலி!!
வியாழன் 13, பிப்ரவரி 2020 11:06:17 AM (IST)
ஐசிசி ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் கேப்டன் விராட் கோலி முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். அதேவேளையில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தை இழந்துள்ளார்.

ரோஹித் சர்மா (855), பாபர் அஸம் (829) முறையே 2, 3-வது இடங்களில் உள்ளனர். நியூஸிலாந்தின் ராஸ் டெய்லர் 828 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான தொடரில் ராஸ் டெய்லர் 194 ரன்கள் விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா 719 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். நியூஸிலாந்து தொடரில் பும்ராவின் பந்து வீசசு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் போனது. 3 ஆட்டங்களிலும் மொத்தமாக 30 ஓவர்களை வீசிய பும்ரா 167 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் விக்கெட் எதையும் கைப்பற்றவில்லை.
நியூஸிலாந்தின் டிரென்ட் போல்ட் 727 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மான் (701), தென் ஆப்பிக்காவின் காகிசோ ரபாடா (674), ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் (673) ஆகியோர்முறையே 3 முதல் 5-வது இடங்களில் உள்ளனர். ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் மொகமது நபி முதலிடத்தை பிடித்துள்ளார். ரவீந்திர ஜடேஜா 3 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை அடைந்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக ஆட வேண்டும் - வாஷிங்டன் சுந்தர் விருப்பம்
திங்கள் 25, ஜனவரி 2021 5:09:47 PM (IST)

சிஎஸ்கே அணியில் 35 வயது ராபின் உத்தப்பா: ரசிகர்கள் அதிருப்தி!
வெள்ளி 22, ஜனவரி 2021 4:38:01 PM (IST)

சென்னையில் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
வெள்ளி 22, ஜனவரி 2021 3:47:12 PM (IST)

தமிழக வீரர் நடராஜனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு : மக்கள் வெள்ளம் திரண்டது
வெள்ளி 22, ஜனவரி 2021 10:26:39 AM (IST)

தோனியுடன் என்னை ஒப்பிடாதீர்: ரிஷாப் பண்ட்
வெள்ளி 22, ஜனவரி 2021 10:25:16 AM (IST)

மலிங்காவை விடுவித்தது ஏன்? மும்பை இந்தியன்ஸ் விளக்கம்
வியாழன் 21, ஜனவரி 2021 12:08:44 PM (IST)
