» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆஸி வீராங்கனையின் சவாலை ஏற்று ஒரே ஒரு ஓவர் பேட்டிங் செய்த சச்சின் !

திங்கள் 10, பிப்ரவரி 2020 5:03:56 PM (IST)ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை பெர்ரியின் சவாலை ஏற்று ஒரே ஒரு ஓவர் மட்டும் பேட்டிங் செய்தார் சச்சின்.

கிரிக்கெட் விளையாட்டில் டாட் பிராட்மேன்க்கு பிறகு அனைத்து நாட்டு கிரிக்கெட் ரசிகர்களாலும் பிரமிப்புடன் பார்க்கப்படுபவர் சச்சின். இவர், இமாலய சாதனைகளைச் செய்துவிட்டு, சில வருடங்களுக்கு முன் அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை பெர்ரியின் சவாலை ஏற்று ஒரே ஒரு ஓவர் மட்டுமே கிரிக்கெட் விளையாட ஒப்புக்கொண்டார்.

ஆஸ்திரேலியா நாட்டில் சில நாட்களுக்கு முன் காட்டுத் தீ பரவியது. இந்த தீ பாதிப்புகளுக்கு நிதி திரட்டுவதற்காக மெல்போர்னில் காட்சி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் அணிக்கு சச்சின் டெண்டுல்கர் கேப்டன். இந்தப் போட்டிக்கு இடையில் ஒரே ஒரு ஓவரை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை எல்லிஸ் பெர்ரி டுவீட் பதிவிட்டிருந்தார்.

இந்த சவாலை ஏற்றுக்கொண்டு, டெண்டுல்கர் தோள்பட்டை காரணமாக பேட்டிங் செய்யக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் ஒரே ஓவர் என்பதால் அதற்கு சச்சின் சம்மத்தித்து சவாலை ஏற்றுக்கொண்டு ஒரு ஒவர் சவாலில் பெண் வீராங்கனை வீசிய பந்தினை எதிர்கொண்ட சச்சின்,தனது அசத்தலான மாஸ்டர் பேட்டிங் பிளஸ் தனது மாஸ் ஸ்டைலுடன் அதே ஃபார்மில் பேட்டிங் செய்து சாவாலை வென்று காட்டினார். ஐசிசி அமைப்பு, சச்சின் பேட்டிங் செய்யும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டு பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory