» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் - ஆட்சியர் தகவல்
வெள்ளி 7, பிப்ரவரி 2020 7:53:31 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை 2019- 2020 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 15.02.2020 மற்றும் 16.02.2020 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

போட்டிகள் நடைபெறும் நாள் / இடம்
15.02.2020 : தடகளம் (ம) ஜூடோ (இருபாலருக்கும்) SDAT மாவட்ட தருவை விளையாட்டரங்கம்
15.02.2020 (ம) 16.02.2020 ஹாக்கி (பெண்களுக்கு மட்டும்) நீச்சல்,குத்துச்சண்டை,இறகுப்பந்து, கூடைப்பந்து, கபாடி, கையுந்துப்பந்து, மற்றும் டென்னிஸ் (இருபாலருக்கும்) SDAT மாவட்ட விளையாட்டரங்கம், தூத்துக்குடி
15.02.2020 (ம) 16.02.2020 ஹாக்கி : (ஆண்களுக்கு மட்டும்) செயற்கை இழை ஹாக்கி மைதானம் கோவில்பட்டி
இதில் கலந்து கொள்பவர்கள் 31.12.2019 அன்று 25 வயதிற்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். (01.01.1995 அன்றோ அல்லது அதற்கு பின்னர் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும். அதற்கான சான்றிதழ்கள் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.) 25 வயது பூர்த்தியானவர்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணையதளத்தில் ஆன்லைனில் பதிவு செய்திட கேட்டு கொள்ளப்படுகிறது. ஆன்லைன் முகவரி www.sdat.tn.gov.in . மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான தனிநபர் / குழு போட்டியில் முதல் மூன்று இடங்களை பெறும் அணி வீரர்கள் / வீராங்கனைகளுக்கு தலா ரூ.1000/-, ரூ.750/- மற்றும் ரூ.500/- பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது.
மாவட்ட அளவிலான போட்டிகளிலிருந்து ஒவ்வொரு விளையாட்டுக்கும் தலைசிறந்த மாவட்ட அணி தேர்வு குழுவால் தேர்ந்து எடுக்கப்படும். அதே போன்று தடகளம் மற்றும் நீச்சல் விளையாட்டுக்களில் முதலிடம் பெறுபவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டு போட்டிகளுக்கு அரசுச்செலவில் அழைத்துச் செல்லப்படுவார்கள் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக ஆட வேண்டும் - வாஷிங்டன் சுந்தர் விருப்பம்
திங்கள் 25, ஜனவரி 2021 5:09:47 PM (IST)

சிஎஸ்கே அணியில் 35 வயது ராபின் உத்தப்பா: ரசிகர்கள் அதிருப்தி!
வெள்ளி 22, ஜனவரி 2021 4:38:01 PM (IST)

சென்னையில் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
வெள்ளி 22, ஜனவரி 2021 3:47:12 PM (IST)

தமிழக வீரர் நடராஜனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு : மக்கள் வெள்ளம் திரண்டது
வெள்ளி 22, ஜனவரி 2021 10:26:39 AM (IST)

தோனியுடன் என்னை ஒப்பிடாதீர்: ரிஷாப் பண்ட்
வெள்ளி 22, ஜனவரி 2021 10:25:16 AM (IST)

மலிங்காவை விடுவித்தது ஏன்? மும்பை இந்தியன்ஸ் விளக்கம்
வியாழன் 21, ஜனவரி 2021 12:08:44 PM (IST)
