» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி, இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

புதன் 5, பிப்ரவரி 2020 5:15:00 PM (IST)

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் போர்ட்செஸ்ட்ரூமில் நடந்த முதலாவது அரை இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இத்தொடர் முழுவதும் இந்த இரு அணிகளும் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி வலிமையுடன் உள்ளது. அதைப்போன்றுபாகிஸ்தான் அணியிலும் அதிவேக பந்துவீச்சாளர்கள் இருப்பதால், இப்போட்டி இரு அணிகளுக்கும் கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரொஹைல் நசீர் (62), ஹைதர் அலி (56) மற்றும் முகமது ஹாரீஸ் (21) ரன்கள் எடுத்து அணிக்கு வலு சேர்த்தனர்.  மற்றவர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர்.இதனால் அந்த அணி 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது.  இந்திய அணிக்கு 173 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதன்பின்பு விளையாடிய இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் (105), சக்சேனா (59) ரன்கள் எடுத்தனர்.  இந்திய அணி 35.2 ஓவர்களில் விக்கெட் எதுவும் இழக்காமல் 176 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.  தொடர்ந்து இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory