» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் : சீனாவை வீழ்த்தி சானியா மிர்சா ஜோடி சாம்பியன்!

சனி 18, ஜனவரி 2020 5:08:48 PM (IST)ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா இணை சாம்பியன் பட்டம் வென்றது.

ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா மற்றும் உக்ரைன் நாட்டு வீராங்கனை நாடியா கிச்செனோக் ஜோடி சீனாவை சேர்ந்த ஜாங் ஷுயி மற்றும் பெங் ஷுயி ஜோடியை எதிர்க்கொண்டனர். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சானியா ஜோடி எதிரணிக்கு வாய்ப்புகளை கொடுக்காமல் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இறுதியாக சானியா ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சீனா வீராங்கனைகளை வீழ்த்தி தொடரை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றது. காயம் மற்றும் குழந்தை பெற்றது காரணமாக இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் களம் கண்ட சானியா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory