» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி : 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

வெள்ளி 17, ஜனவரி 2020 10:14:10 PM (IST)ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே, நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பின்ச் பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் தவான், ரோகித் சர்மா அபாரமான தொடக்கத்தை கொடுத்தனர். 

ரோகித் சர்மா 42 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், தவான் அதிரடி காட்டினார். தவான் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 96 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றம் அளித்தார். இதைத் தொடர்ந்து, கேப்டன் கோலி (78), கே.எல். ராகுல் (80) ஆகியோரின் சிறப்பான பங்களிப்பால் இந்திய அணி இமாலய ஸ்கோரை எட்டியது. 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் சேர்த்தது.

பின்னர், 341 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தொடக்க வீரர்களில் வார்னர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து, கேப்டன் பின்ச்சுடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். இதனால், பின்ச் 33 ரன்னிலும், லபுசக்ஷனே 46 ரன்னிலும் சீரான இடைவேளையில் விக்கெட்டுக்களை இழந்தனர். ஆனால், மறுபுறத்தில் ஸ்மித் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். பின்னர், சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 98 ரன்கள் எடுத்திருந்த போது குல்தீப் யாதவ் பந்தில் ஸ்மித் போல்டானார். இதன்மூலம், இந்திய அணியின் வெற்றி ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டது.

பின்னர், வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இறுதியில் ஆஸ்திரேலிய அணி 49.1 ஓவர்களில் 304 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இதன்மூலம், இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் முகமது சார்பில் 3 விக்கெட்டுகளும், சைனி, ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், பும்ரா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட 1-1 என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory