» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஜோ ரூட்டை கேலி செய்த தெ.ஆ. வீரர் ரபடாவுக்குத் தடை!

வெள்ளி 17, ஜனவரி 2020 5:20:28 PM (IST)இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட், போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்றைய முதல்நாள் ஆட்டத்தில் 27 ரன்களில் இங்கிலாந்து கேப்டன் ரூட்டை போல்ட் செய்தார் தெ.ஆ. வேகப்பந்துவீச்சாளர் ரபடா. தனது வெற்றியை அப்போது மிகவும் ஆக்ரோஷமாகக் கொண்டாடினார். இது ஐசிசி விதிமுறையை மீறியுள்ளதாக அவருக்கு 1 அபராதப் புள்ளி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்ட ஊதியத்திலிருந்து 15% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்துக் கடந்த இரு வருடங்களில் 4 அபராதப் புள்ளிகள் வைத்துள்ளதால் 4-வது டெஸ்டில் விளையாட ரபடாவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory