» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இலங்கை, ஆஸ்திரேலியா தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு: பும்ரா - தவனுக்கு வாய்ப்பு!

திங்கள் 23, டிசம்பர் 2019 5:51:35 PM (IST)இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களுக்கான இந்திய அணியில் வேகப் பந்து வீச்சாளர் பும்ரா, தொடக்க வீரர் ஷிகர் தவன் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் ஆகிய இரு தொடர்களுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. 2019-ம் ஆண்டு மிகச்சிறப்பாக விளையாடியுள்ள ரோஹித் சர்மா மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ஷமி ஆகியோருக்கு இத்தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பதிலாக பும்ரா, தவன் ஆகியோர் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்கள். இலங்கைக்கு எதிரான டி20 தொடர் ஜனவரி 5 முதல் தொடங்கவுள்ளது. இதன்பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஜனவரி 14 அன்று தொடங்கவுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory