» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல் 2020 : கொல்கத்தா அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் தொடர்கிறார்

சனி 21, டிசம்பர் 2019 10:27:28 AM (IST)

ஐபிஎல் 2020 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளே ஆஃப் செல்லவில்லை. லீக் சுற்றின் இடையே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது. அணியில் கேப்டனுக்கு எதிராக கலகம் வெடித்தது. அப்போதே அடுத்த சீசனில் தினேஷ் கார்த்திக் கேப்டனாக தொடர்வது சந்தேகம் என கூறப்பட்டது. ஆனால், தினேஷ் கார்த்திக்குக்கு சாதகமாக அனைத்தையும் மாற்றி வருகிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

கொல்கத்தா அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் கடந்த 2018 சீசனில் நியமிக்கப்பட்டார். அந்த தொடரில் அணியை பிளே-ஆஃப் வரை அழைத்துச் சென்று அசத்தினார். 2019 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் கலகம் வெடித்தது. பாதி தொடரில் கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்தனர் சில வீரர்கள். துணை கேப்டன் ராபின் உத்தப்பா களத்திலேயே அவருக்கு எதிராக நடந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், 2020 ஐபிஎல் ஏலத்துக்கு முன் ராபின் உத்தப்பா அணியில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த சீசனில் அவரது பேட்டிங்கும் பெரிய அளவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பயிற்சியாளர் ஜாக்கஸ் காலிஸ் நீக்கப்பட்டு, புதிய பயிற்சியாளராக பிரென்டன் மெக்குல்லம் நியமிக்கப்பட்டார். கேப்டன் தினேஷ் கார்த்திக் அதே பதவியில் தொடர்வாரா? என்ற கேள்வி இருந்தது.

இந்த நிலையில், 2020 ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கலந்து கொண்டது. இந்த ஏலத்தில் புதிய பயிற்சியாளர் மெக்குல்லம் யாரை வாங்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இங்கிலாந்து அணியின் உலகக்கோப்பை வென்ற கேப்டன் இயான் மார்கனை குறி வைத்து வாங்கினர் மெக்குல்லம். அதன் மூலம், இயான் மார்கன் கொல்கத்தா அணியின் கேப்டனாக வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டது. இதன் மூலம், ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது. தினேஷ் கார்த்திக் தான் கேப்டனாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் கொல்கத்தா அணி, அவர் ஒருவருக்காக அணியில் பல மாற்றங்களை செய்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory