» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சென்னை ஹோட்டல் ஊழியரைத் தேடும் சச்சின்: தமிழில் ட்வீட்!!

சனி 14, டிசம்பர் 2019 5:35:40 PM (IST)

சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது தனக்கு உதவிய சென்னை தாஜ் கோர மண்டல் ஊழியரை தான் தேடி வருவதாக சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் ட்வீட் செய்ததாவது: எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன. சென்னை டெஸ்ட் தொடரின் போது தாஜ் கோரமண்டல் ஊழியர் ஒருவர் என்னுடைய முழங்கைத் தடுப்பு பற்றி கூறிய ஆலோசனைக்குப் பின் அதன் வடிவத்தை மாற்றினேன். அவரைச் சந்திக்க ஆசைப்படுகிறேன். கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தன்னுடைய ட்வீட்டை ஆங்கிலத்திலும் பிறகு தமிழிலும் அவர் வெளியிட்டுள்ளார்.

விடியோவில் அவர் கூறியுள்ளதாவது: ஹோட்டலில் தங்கியிருந்தபோது நான் காபி கேட்டேன். ஊழியர் ஒருவர் கொண்டு வந்தார். என்னிடம், கிரிக்கெட் பற்றி விவாதிக்க வேண்டும் என்று கூறினார். நீங்கள் முழங்கைத் தடுப்பைப் பயன்படுத்தும்போது நான் கவனித்துள்ளேன், அப்போது உங்களுடைய பேட்டின் ஸ்விங் மாறுகிறது என்றார். நான் இதைப் பற்றி யாரிடமும் பேசியதில்லை. எனக்கு மட்டுமே அதைப் பற்றி தெரியும். மேலும் அவர் சொன்னார், நான் உங்கள் பேட்டிங்கை மீண்டும் மீண்டும் பார்ப்பேன். அப்போதுதான் கவனித்தேன், முழங்கைத் தடுப்பு அணிந்திருக்கும் போது உங்களுடைய பேட்டின் ஸ்விங் மாறுகிறது என்றார். நான் அவரிடம் சொன்னேன், இந்த உலகத்தில் நீங்கள் மட்டும்தான் அதைக் கண்டுபிடித்துள்ளீர்கள் என்றேன். அதன்பிறகு என்னுடைய முழங்கைத் தடுப்பின் வடிவத்தை மாற்றிக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory