» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ரஜினிகாந்த் பிறந்தநாள்: சச்சின், ஹர்பஜன் வாழ்த்து!!

வியாழன் 12, டிசம்பர் 2019 4:52:00 PM (IST)நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரை பிரபலங்கள் , நண்பர்கள் , ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
அந்தவகையில் தற்போது இந்திய கிரிக்கெட் வீர ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு அழகிய தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். "ஒருமுறை கூட உங்கள் சிகரம் குறைந்ததேயில்லை.நீங்கள் தூக்கிப்போடுப் பிடிக்கும் சிகரெட் விழுந்ததேயில்லை.ஆறில் இருந்து அறுபது வரை,உங்கள் வசீகரத்தில் மயங்கிய நாங்கள் எழுந்ததேயில்லை. சினிமா பேட்டை இன் லார்டு என்றுமே நீங்கள் தான் தலைவா.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். என கூறி பதிவிட்டுள்ளார்

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என்று தமிழில் அவர் எழுதியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது: பிறந்தநாள் நல்வாழ்த்துகள். திரையில் வெளிப்படும் ஸ்டைல், எளிமையால் ஒவ்வொரு தர்பாரிலும் தலைவராகத் திகழ்கிறீர்கள் என்று வாழ்த்தியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory