» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் : இந்திய அணியில் மயங்க் அகர்வால்!!
புதன் 11, டிசம்பர் 2019 3:49:12 PM (IST)

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணியில் காயத்தினால் ஷிகர் தவானுக்கு பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டு உள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டி தொடரில் பங்கேற்கிறது. இதில், டி20 போட்டிகள் முதலில் நடந்தன. இதுவரை நடந்த முதல் இரு போட்டிகளில் ஒன்றில் இந்திய அணியும், மற்றொன்றில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளன. இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கிறது.
இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையே 3 ஒரு நாள் போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் ஒரு நாள் போட்டி சென்னையில் வருகிற 15ந்தேதி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து, வருகிற 18ந்தேதி 2வது போட்டியும், 22ந்தேதி 3வது போட்டியும் நடைபெறும். இந்த போட்டி தொடரில் இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் காயத்தினால் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டு உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக ஆட வேண்டும் - வாஷிங்டன் சுந்தர் விருப்பம்
திங்கள் 25, ஜனவரி 2021 5:09:47 PM (IST)

நடராஜன், சுந்தர், சிராஜ் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு கார் பரிசு : மஹிந்திரா அறிவிப்பு
சனி 23, ஜனவரி 2021 5:29:03 PM (IST)

சிஎஸ்கே அணியில் 35 வயது ராபின் உத்தப்பா: ரசிகர்கள் அதிருப்தி!
வெள்ளி 22, ஜனவரி 2021 4:38:01 PM (IST)

சென்னையில் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
வெள்ளி 22, ஜனவரி 2021 3:47:12 PM (IST)

தமிழக வீரர் நடராஜனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு : மக்கள் வெள்ளம் திரண்டது
வெள்ளி 22, ஜனவரி 2021 10:26:39 AM (IST)

தோனியுடன் என்னை ஒப்பிடாதீர்: ரிஷாப் பண்ட்
வெள்ளி 22, ஜனவரி 2021 10:25:16 AM (IST)
