» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து தவான் விலகல்: சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு

புதன் 27, நவம்பர் 2019 4:54:29 PM (IST)

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணியில் ஷிகர் தவான் இடம் பிடித்திருந்தார். தவான் சையத் முஷ்டாக் அலி டிராபியில் டெல்லி அணிக்காக விளையாடினார். மகாராஷ்டிரா அணிக்கெதிரான போட்டியில் விளையாடும்போது காயம் ஏற்பட்டுள்ளது. 

அந்த காயம் குணமடைய அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளும் என்பதால் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.  வங்காளதேச அணிக்கெதிரான தொடரில் இடம் பிடித்திருந்த சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாமலேயே வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து நீக்கப்பட்டார். தேர்வுக்குழுவின் இந்த முடிவுக்கு எதிராக கடும் விமர்சனம் எழும்பியது. இந்நிலையில் சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory