» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அசாருதின், அம்பத்தி ராயுடு மோதல்: ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் புயல்!!

திங்கள் 25, நவம்பர் 2019 5:36:27 PM (IST)

அசாருதின், அம்பத்தி ராயுடு மோதல், தற்போது ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் அனைத்து வகையிலான போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு, பின்னர் தனது முடிவை மாற்றினார். 

சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே மற்றும் சையத் முஸ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஐதராபாத் அணி கேப்டனாக இருந்தார். தற்போது, ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் மீது பல்வேறு புகார்களை அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமாராவுக்கு டேக் செய்த ட்விட்டரில், ‘ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் நிறைந்துள்ளது. இப்படி பணம் மற்றும் ஊழல்வாதிகளால் கிரிக்கெட் சங்கம் நிரம்பியிருந்தால் ஐதராபாத் கிரிக்கெட் எப்படி முன்னேறும்? உடனடியாக இதுபற்றி விசாரிக்க வேண்டுகிறேன்.

ரஞ்சி போட்டியில் விளையாட ஆர்வமாக இருந்தேன். அணியில் அதிக அளவில் அரசியல் உள்ளது. இதனால் வரும் ரஞ்சி தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடமாட்டேன். திறமை இல்லாத வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பணக்காரர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார். 

அம்பத்தி ராயுடுவின் புகார் பற்றி ஐதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவர் அசாருதினிடம் கேட்டபோது, ‘‘அவர் விரக்தி அடைந்த கிரிக்கெட் வீரர்’ என்றார். இதற்கு பதிலளித்துள்ள அம்பத்தி ராயுடு, ‘அசாருதின், இதைத் தனிப்பட்ட பிரச்னையாகப் பார்க்க வேண்டாம். ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரியும். நமது தனிப்பட்ட மோதலை விட்டுவிட்டு, வருங்கால கிரிக்கெட் வீரர்களை காப்பாற்றுங்கள் என்று வலியுறுத்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். அசாருதின், அம்பத்தி ராயுடு மோதல், தற்போது ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory