» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி: தொடரைக் கைப்பற்றியது!!

ஞாயிறு 24, நவம்பர் 2019 5:30:51 PM (IST)கொல்கத்தாவில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.

இந்தியா- வங்கதேசம் அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணி 30.3 ஓவர்களில் 106 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பந்து வீச்சில் இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 
இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 

கேப்டன் விராட் கோலியின் (136 ரன்கள்) அபார சதம் , புஜாரா (55 ரன்கள்),  ரகானே (51 ரன்கள்) ஆகியோரின் அரைசதம் ஆகியவற்றால், இந்திய அணி வலுவான நிலையை எட்டியது. இந்திய அணி 89.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்திருந்த நிலையில் தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. வங்கதேசத்தை விட 246 ரன்கள் முன்னிலை பெற்றது. இதைத்தொடர்ந்து, வங்கதேசம் 2-வது இன்னிங்சை தொடங்கியது. இதிலும் இந்திய பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்துவீசினர்.

வங்கதேசம் அணியில் முஷ்பிகுர் ரஹிம் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்தார். அவர் 74 ரன்னில் அவுட்டானார். 39 ரன்கள் எடுத்த நிலையில் மகமதுல்லா காயத்தால் வெளியேறினார். இந்நிலையில், இன்று 3ம் நாள் ஆட்டம் தொடங்கியது. உமேஷ் யாதவ் சிறப்பாக பந்துவீசி வங்கதேச வீரர்களை அவுட்டாக்கினார். இறுதியில், வங்கதேசம் அணி 41.1 ஓவரில் 195 ரன்னில் ஆல் அவுட்டானது.  இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 5 விக்கெட்டும், இஷாந்த் சர்மா 4 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி 2-0 தொடரை கைப்பற்றி அசத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory