» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வங்கதேசத்துக்கு எதிரான டி-20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு - கோலிக்கு ஒய்வு

வியாழன் 24, அக்டோபர் 2019 5:38:35 PM (IST)

வங்கதேசத்துக்கு எதிரான டி-20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. நவம்பர் 3 ஆம் தேதி முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியும், 7 மற்றும் 10 ஆகிய தேதிகளில் முறையே ராஜ்கோட் மற்றும் நாக்பூரில் 2-வது 3-வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

15 பேர் கொண்ட இந்திய அணியில், கேப்டன் விராட் கோலி இடம் பெறவில்லை.  தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று வருவதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல் தோனிக்கும் இந்தத் தொடரில் வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:- ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், கே.எல் ராகுல், சஞ்சு சாம்சன்,  ஷ்ரேயஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பண்ட் (விக்கெட் கீப்பர்), க்ருணல் பாண்ட்யா, ரகுல் சஹார், தீபக் சஹார், கலீல் அகமது, ஷிவம் துபே, சர்துல் தாகூர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory