» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பெருமையை மீட்டெடுப்பேன்: கங்குலி உறுதி

புதன் 23, அக்டோபர் 2019 5:31:05 PM (IST)இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 39-வது தலைவராக  சவுரவ் கங்குலி பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஊழல் புகாரைத் தொடர்ந்து, கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்க நிர்வாகிகள் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. முன்னாள் தலைமைத் தணிக்கையாளர் வினோத் ராய் தலைமையிலான குழுவினர், 33 மாதங்களாக கிரிக்கெட் வாரியத்தை நிர்வகித்துவந்தனர். இதனைத் தொடர்ந்து, கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில், தலைவர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தார். இதேபோல, துணைத் தலைவர் பதவிக்கு மகிம் வர்மா, செயலாளர் பதவிக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா-வின் மகன் ஜெய், பொருளாளர் பதவிக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் இளம் சகோதரர் அருண் துமல் ஆகியோர் மட்டும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

இதையடுத்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டம், மும்பையில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. இதில், கிரிக்கெட் வாரியத் தலைவர் உள்ளிட்டோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து, கிரிக்கெட் வாரியத்தின் 39-வது தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றார். கங்குலி தலைமையில் கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை தலைவர் பதவியில் இருக்கும் சவுரவ் கங்குலி, முதல் தர கிரிக்கெட் போட்டிகளை மேம்படுத்த உள்ளதாக உறுதியளித்துள்ளார். மேலும், கிரிக்கெட் வாரியத்தின் பெருமையை மீட்டெடுக்க உள்ளதாகவும் உறுதியளித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory