» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்தியாவிடம் முதல் முறையாக ஒயிட்வாஷ் பெற்றது தென் ஆப்பிரிக்கா: 3வது டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வி

செவ்வாய் 22, அக்டோபர் 2019 12:18:55 PM (IST)தென் ஆப்பிரிக்காவுக்கு 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியிடம் முதன்முதலாக 3-0 ஒயிட்வாஷ் பெற்றது தென் ஆப்பிரிக்கா.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-ஆவது டெஸ்ட் ஆட்டம் ராஞ்சியில் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா இரட்டைச் சதம் விளாசினார். மொத்தம் 255 பந்துகளில் 28 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 212 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

துணைக் கேப்டன் அஜிங்க்ய ரஹானே, 192 பந்துகளில் 17 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் 115 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்காவின் லிண்டே 4 விக்கெட்டுகளையும், ரபாடா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்நிலையில், முதல் இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 3-ஆம் நாளில் 162 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஹம்ஸா 62 ரன்களும், லிண்டே 37 மற்றும் பவுமா 32 ரன்கள் சேர்த்தனர். இந்தியா தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். அறிமுக வீரர் நதீம், ஷமி மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதனால் இந்திய அணியை விட 335 ரன்கள் பின்தங்கிய நிலையில், தென் ஆப்பிரிக்க அணி ஃபாலோ ஆன் பெற்று 2-ஆவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது. 4-ஆம் நாள் ஆட்டத்தில் 2-ஆவது இன்னிங்ஸிலும் 133 ரன்களுக்கு சுருண்டது. ஷமி 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். உமேஷ் யாதவ், நதீம் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஜடேஜா மற்றும் அஸ்வின் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இதையடுத்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடரை 3-0 என கைப்பற்றி, தென் ஆப்பிரிக்காவை ஒயிட் வாஷ் செய்தது.இந்தியாவில் இந்திய அணி 11 தொடர்களில் வென்று சாதனை புரிந்துள்ளது. 2012-13-ல் தோனியின் தலைமையின் கீழ் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக வாங்கிய உதை தற்போது தொலைதூர நினைவானது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி 5 வெற்றிகளுடன் 240 புள்ளிகள் என்று மற்ற அணிகளைக் காட்டிலும் வெகுதொலைவில் முதலிடத்தில் உச்சம் பெற்றுள்ளது.ஆட்ட நாயகன், தொடர் நாயகன் இரண்டுமே ரோஹித் சர்மாதான். இந்தத் தொடரில் முகமது ஷமி 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory