» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ரோஹித் சர்மா சதம்: சரிவிலிருந்து மீண்டது இந்தியா!

சனி 19, அக்டோபர் 2019 4:44:32 PM (IST)தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மா சதம் அடித்து அசத்த, இந்திய அணி சரிவிலிருந்து மீண்டுள்ளது.

இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று (சனிக்கிழமை) தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங்கை துவங்கியது.  இந்திய அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. மயங்க் அகர்வால் 10 ரன்களில் ரபாடா பந்தில் ஆட்டம் இழந்தார். 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய புஜாரா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 

இதனைத் தொடர்ந்து கேப்டன் விராட் கோலியும் 12 ரன்களில் வெளியேறினார். இந்திய அணி 39 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. இதையடுத்து  துவக்க வீரர் ரோஹித் சர்மாவும், ரஹானாவும் இணைந்து நிதானமாக ஆடி ரன்களை குவித்தனர். ரோஹித் தொடக்கம் முதல் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்த, ரஹானே தொடக்கத்தில் எளிதான பந்துகளை பவுண்டரிகளுக்கு விரட்டி நல்ல ஸ்டிரைக் ரேட்டில் ரன் குவித்து வந்தார். இதனால், இந்திய அணி பக்கம் இருந்த நெருக்கடி தென் ஆப்பிரிக்காவை சூழ்ந்தது.

இதைப் பயன்படுத்திய ரோஹித், ரஹானே இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டு அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். அரைசதம் அடித்த பிறகு ரோஹித் சர்மா ரன் குவிப்பதை சற்று துரிதப்படுத்தினார். குறிப்பாக டேன் பீட் சுழற்பந்துவீச்சில் பவுண்டரிகளும், சிக்ஸர்களும் அடித்த ரோஹித் சர்மா, சிக்ஸர் மூலமே இந்த தொடரின் 3-வது சதத்தை அடித்தார். இந்த இணையின் சிறப்பான ஆட்டத்தால் தேநீர் இடைவேளையில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 108 ரன்களுடனும், ரஹானே 74 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

தேநீர் இடைவேளைக்குப் பிறகு 6 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, மழையும் பெய்து ஓய்ந்தது. இதனால், அங்கு மீண்டும் ஆட்டம் தொடங்குவதற்கான உகந்த சூழல் இல்லாத காரணத்தினால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இந்திய அணி முதல் நாளில் 58 ஓவர்களில் 224 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ரோஹித் சர்மா 117 ரன்களுடனும், அஜின்க்யா ரஹானே 83 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் ககிசோ ரபாடா 2 விக்கெட்டுகளையும், அன்ரிச் நார்ட்ஜே 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory