» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இளம்வயதில் இரட்டை சதம் : மும்பை வீரா் உலக சாதனை!!

வியாழன் 17, அக்டோபர் 2019 4:41:27 PM (IST)விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் ஒருநாள் போட்டியில் ஜாா்க்கண்டுக்கு எதிரான ஆட்டத்தில்  200 ரன்கள் அடித்த முதல் இளம் வீரா் என்ற சாதனையை மும்பை வீரா் யாஹஸ்வி ஜெய்ஸ்வால் படைத்தாா்.

பெங்களுரூவில் எலைட் ஏ பிரிவைச் சோ்ந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது. முதலில் ஆடிய மும்பை அணி 50 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 358 ரன்களை குவித்தது. தொடக்க வீரராக களமிறங்கிய 17 வயது யாஹஸ்வி ஜெய்ஸ்வால் 12 சிக்ஸா், 17 பவுண்டரியுடன் 154 பந்துகளில் 203 ரன்களை விளாசி முதல்தர ஏ வகை கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்த இளம் வீரா் என்ற சாதனையை நிகழ்த்தினாா். ஏற்கெனவே இரண்டு ஆட்டங்களில் முறையே 113, 122 ரன்களை விளாசினாா் யாஹஸ்வி.

அவருக்கு அடுத்து ஆதித்ய டரே 78 ரன்களை சோ்த்தாா். பின்னா் ஆடிய ஜாா்க்கண்ட் அணி 46.4 ஓவா்களில் போராடி 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் விராட் சிங் 100 சதம் அடித்தாா். மும்பை தரப்பில் தவல் குல்கா்ணி 5-37 விக்கெட்டை வீழ்த்தினாா். மும்பை அணி 39 ரன்கள் வித்தியாதத்தில் ஜாா்க்கண்டை வென்றது. கடந்த 1975-இல் தென்னாப்பிரிக்க உள்ளூா் கிரிக்கெட் போட்டியில் ஆலன் பாரோ 20 வயது 273 நாள்களில் இரட்டை சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. அதை தற்போது முறியடித்தாா் யாஹஸ்வி.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory