» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ரசிகர்களின் செயலுக்காக ஸ்மித்திடம் மன்னிப்புக் கேட்ட விராட் கோலி!!

திங்கள் 10, ஜூன் 2019 12:39:41 PM (IST)ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை ஆட்டத்தில் இந்திய ரசிகர்களின் செயலுக்காக ஸ்மித்திடம் மன்னிப்பு கோரியதாக விராட் கோலி கூறினார்.

நேற்று ஆட்டத்தின் போது தடைக்கு பின் சர்வதேச போட்டிகளில் விளையாட வந்துள்ள ஆஸி. அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித்தை ரசிகர்கள் கேலி செய்தனர். ரசிகர்களின் இந்தப் போக்கு விராட் கோலியை கடும் ஏமாற்றத்திற்குள்ளாக்கியது. ரசிகர்களை நோக்கி அவர் செய்கை செய்து நிறுத்துங்கள், கேலி வேண்டாம், ஸ்மித்துக்கு உற்சாகமளியுங்கள் என்ற விதத்தில் செய்கை செய்து தன் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை வெளிப்படுத்தினார் விராட் கோலி. இது ஆஸ்திரேலிய வீரர்களிடத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய ஊடகங்களும் விராட் கோலிக்கு பாராட்டு மழை பொழிந்து வருகிறது.இந்நிலையில் விராட் கோலியே இது பற்றி கூறும்போது, "நான் ஸ்மித்துக்காக வருந்துகிறேன். எங்களுக்கிடையே நிறைய நடந்துள்ளது, வாதங்கள், மோதல்கள் இருந்துள்ளன, ஆனால் இப்போது அவர் மீண்டு வந்துள்ளார். மீண்டும் வந்துள்ளார்.ஐபில் கிரிக்கெட்டில் கூட பார்த்தேன், அவர் விளையாடுவதில் கவனம் செலுத்தினார், ஆனால் சில சம்பவங்கள் நடந்தன. ஓவலில் இந்தப் போட்டியிலும் இது தொடர்ந்தது. நான் அவருக்காக உண்மையில் வருந்துகிறேன். ரசிகர்களின் நடத்தைக்காக நான் அவரிடம் சென்று மன்னிப்புக் கேட்டேன்” என்றார்.


மக்கள் கருத்து

ராஜாJun 12, 2019 - 12:23:59 PM | Posted IP 173.2*****

விராட் கிரேட்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory