» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா: வரலாறு படைத்தது கோலி படை!!

திங்கள் 7, ஜனவரி 2019 10:46:34 AM (IST)



ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்திய அணி  பார்டர்-கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியது.

கடந்த 72 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று புதிய வரலாறு படைத்தது இந்திய அணி. சிட்னியில் நடந்து வந்த 4-வது டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிரா என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது கோலி தலைமையிலான படை. 72 ஆண்டுகளுக்குப்பின் விராட் கோலி தலைமையிலான படை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று புதிய வரலாறு படைத்துள்ளது.

இதுவரை ஆசிய அணிகள் ஆஸ்திரேலிய மண்ணில் 98 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ளன. அதில் 66 போட்டிகளில் தோல்வியும், 11 வெற்றிகளும் பெற்றுள்ள போதிலும் யாரும் தொடரை வென்றது இல்லை.31 முறை ஆசிய அணிகள் ஆஸ்திரேலியாவுக்கு பயணித்தபோதிலும் தொடரை வெல்ல முடியாமல் தலை கவிழ்ந்து திரும்பின. ஆசிய அணிகளின் சார்பில் 29 கேப்டன்கள் தங்கள் அணிகளை வழிநடத்திச் சென்று எந்த அணியும் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியால் தவித்த நிலையில், விராட் கோலி வரலாறு படைத்துவிட்டார்.

கடநத 1947-ம் ஆண்டு முதல்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்த இந்திய அணி இதுவரை அங்கு ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. இப்போது ஆஸ்திரேலியாவை அதன் மண்ணில் வீழ்த்திய ஆசியாவின் முதல் அணி எனும் பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 31 ரன்களிலும், மெல்போர்னில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியாவை வென்று இருந்தது. பெர்த் டெஸ்டில் மட்டும் ஆஸி. வென்றது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்திய அணி புதிய வரலாறு படைத்தது.



இந்த டெஸ்ட் தொடரில் 3 சதங்கள் அடித்து மிகச்சிறப்பாக ஆடிய சட்டேஸ்வர் புஜாரா தொடர் நாயகனாகவும், ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடரில் 521 ரன்கள் சேர்த்தார் புஜாரா. மேலும், 4-வது டெஸ்ட் போட்டியி்ல ஆஸ்திரேலிய அணியை முதல் இன்னிங்ஸில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலம் 64 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலிய மண்ணில் சினாமென் பந்துவீச்சாளர் ஒருவர் 5 விக்கெட்டுகள் பெறுவது இதுமுதல்முறை என்ற பெருமையையும் பெற்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory