» செய்திகள் » சிறப்பு பார்வை
ஸ்காட் நிறுவனத்தின் 3 கல்லூரிகளுக்கு தேசிய தரச்சான்று : கிளீட்டஸ்பாபு தகவல்
வியாழன் 29, டிசம்பர் 2011 4:13:39 PM (IST)

ஸ்காட் கல்வி நிறுவனத்தின் சார்பில் நெல்லை, தூத்துக்குடி மற்றும் வாகைகுளம் என 15 கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இந்நிறுவனத்தின் 3 கல்லூரிகளுக்கு தேசிய அளவிலான தரச் சான்றுகள் கிடைத்துள்ளதாக நிறுவனர் கிளீட்டஸ் பாபு தெரிவித்துள்ளார்.
வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியின் கூட்ட ரங்கில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்காட் நிறுவனங்களின் குழுமத் தலைவர் டாக்டர் எஸ்.கிளீட்டஸ் பாபு கூறுகையில்., ஸ்காட் நிறுவனத்தின் சார்பில் கடந்த 27 ஆண்டுகளாக கல்வி மற்றும் சமூக சேவை பணிகள் நடைபெற்ற வருகிறது.
தற்போது ஸ்காட் நிறுவனத்தின் பராமரிப்பில் 500 குக் கிராமங்கள் உள்ளன. அங்கு கல்வியை இடைநிறுத்தம் செய்யும் மாணவர்களை கண்டறிந்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்து தொடர்கல்வி பெற்றிடவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 22 ஆயிரம் குழந்தைகள் வரை பயன் பெற்றள்ளனர்.
கிராம பள்ளிகள் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து அங்குள்ள குழந்தைகளின் கல்வி தரத்தை அதிகரிக்கச் செய்வதில் ஆர்வம் காட்டி வரும் ஸ்காட் நிறுவனத்தின் சார்பில் நெல்லை, வடக்கன்குளம் மற்றும் தூத்துக்குடியில் சுமார் 15 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது .
தரமான கல்வியை வழங்கி வரும் எங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தற்போது தேசிய அளவிலான தரச்சான்றுகளான என்.பி.ஏ மற்றும் நாக் சான்றுகள் கிடைத்துள்ளது,வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி, சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரி மற்றும் சேரன்மகாதேவி ஸ்காட் கல்வியியல் கல்லூரிகளுக்கு இத்தகைய சான்றுகள் கிடைத்துள்ளது.
இதன் மூலம் எங்கள் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ மாணவி யர்களின் படிப்புக் காலம் முடியும் முன்னரே வேலை பெற்றிடும் வாய்ப்பு மேலும் அதிகரிக்கும், பிரபல நிறுவனங்கள் எங்கள் கல்லூரியை தேர்வு செய்து கேம்பஸ் இண்டர்வியூ நடத்திட முன் வரும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. இது நெல்லை,தூத்துக்குடி மாவட்ட மாணவ. மாணவியர்களுக்கு கிடைத்துள்ள ஒரு வரப்பிரசாதமாகும் என்றார்.
பேட்டியின் போது ஸ்காட் நிறுவனங்களின் பொது மேலாளர் தம்பித்துரை, எப்.எக்ஸ் கல்லூரியின் முதல்வர் ராஜ கோபால், சேரன் மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரி முதல்வர் முகமதுசெரீஷ், ஸ்காட் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் பவானி, நிர்வாக மேலாளர் கிருஷ்ணகுமார், பிஆர்ஓ மனோகரன் சாமுவேல் உடன் இருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
பதிவாகவில்லை

