» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது; பொதுமக்கள் பிடித்துப் போலீசில் ஒப்படைப்பு!
சனி 8, ஆகஸ்ட் 2026 4:59:44 PM (IST)
எட்டையாபுரம் அருகே பள்ளி ஆசிரியைக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்தி வந்த நபரைப் பொதுமக்கள் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள சிங்கிலிபட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வரும் 47 வயது பெண் ஆசிரியர், தினமும் கோவில்பட்டியில் இருந்து பேருந்தில் வந்து இறங்கி பள்ளிக்கு நடந்து செல்வது வழக்கம்.இந்நிலையில், சிவஞானபுரத்தைச் சேர்ந்தவரும் தற்போது முதலிபட்டியில் வசித்து வருபவருமான கூடலிங்கம் என்பவரின் மகன் முத்துக்கிருஷ்ணன் (44), அந்தப் பெண் ஆசிரியரை தினமும் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்றுள்ளார். மேலும், வழியில் அவரை மறித்து ஆபாசமாகப் பேசுவதும், அதிவேகமாக வாகனத்தை ஓட்டி வந்து அச்சுறுத்துவதுமாகத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
வழக்கம் போல் இன்று பேருந்து நிலையத்திலிருந்து பள்ளிக்கு நடந்து சென்ற பெண் ஆசிரியரைப் பின்தொடர்ந்து வந்து முத்துக்கிருஷ்ணன் மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், முத்துக்கிருஷ்ணனைச் சூழ்ந்து மடக்கிப் பிடித்து எட்டையாபுரம் காவல் நிலையப் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பொதுமக்களிடம் இருந்து வாலிபரைக் மீட்ட எட்டையாபுரம் போலீசார், காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், முத்துக்கிருஷ்ணன் பள்ளிக்கு வரும் சிறுமிகளின் பெற்றோர்களை வழிமறித்து அவர்களின் செல்போன் எண்களைக் கேட்டுப் பல பெண்களுக்குத் தொல்லை கொடுத்து வந்ததாகவும் அப்பகுதி கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அன்னை வேளாங்கண்ணி கெபி 44-வது ஆண்டு திருவிழா : தூத்துக்குடியில் கோலாகலத் தொடக்கம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 9:22:58 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் : நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:43:26 PM (IST)

மூதாட்டியைக் கட்டிப்போட்டு 44 கிராம் நகை பறிப்பு : பக்கத்து வீட்டுப் பெண் உட்பட 2 பேர் கைது!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:14:03 PM (IST)

பெண்ணைக் கொன்று வேக வைத்த கொடூர தம்பதி கைது: விசாரணையில் பகீர் தகவல்கள்!
சனி 29, ஆகஸ்ட் 2026 4:39:35 PM (IST)

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக: தமிழக அரசுக்கு தேமுதிக வலியுறுத்தல்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:50:02 AM (IST)

அஞ்சல்துறையில் 2,095 பணியிடங்கள்: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:34:39 AM (IST)



kaajiAug 9, 2026 - 09:46:46 PM | Posted IP 172.7*****