» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வீடு புகுந்து இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்; பள்ளி வேன் டிரைவர் சிறையில் அடைப்பு!
சனி 8, ஆகஸ்ட் 2026 10:19:56 AM (IST)
கயத்தாறு அருகே தனியாக இருந்த இளம்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி வேன் டிரைவரை, அந்தப் பெண்ணே தைரியமாக பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா, மூர்த்தீஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் குமார் (23). இவர் கயத்தாறில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் வேன் டிரைவராகப் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலையில், 35 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் மாலையில் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, குமார் அப்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கையைப் பிடித்து இழுத்துப் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், உடனடியாகச் சுதாரித்துக் கொண்டு அந்த வாலிபரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். தன்னைக் காப்பாற்றிக் கொண்டதுடன், வாலிபரை வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்து, உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிடித்துக் கயத்தாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இச்சம்பவம் குறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில், கயத்தாறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் காந்திராஜன் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையைத் தொடர்ந்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஓட்டுநர் குமாரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அன்னை வேளாங்கண்ணி கெபி 44-வது ஆண்டு திருவிழா : தூத்துக்குடியில் கோலாகலத் தொடக்கம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 9:22:58 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் : நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:43:26 PM (IST)

மூதாட்டியைக் கட்டிப்போட்டு 44 கிராம் நகை பறிப்பு : பக்கத்து வீட்டுப் பெண் உட்பட 2 பேர் கைது!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:14:03 PM (IST)

பெண்ணைக் கொன்று வேக வைத்த கொடூர தம்பதி கைது: விசாரணையில் பகீர் தகவல்கள்!
சனி 29, ஆகஸ்ட் 2026 4:39:35 PM (IST)

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக: தமிழக அரசுக்கு தேமுதிக வலியுறுத்தல்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:50:02 AM (IST)

அஞ்சல்துறையில் 2,095 பணியிடங்கள்: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:34:39 AM (IST)


